BREAKING NEWS

திருநெல்வேலி அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பாபநாசம், சேர்வலாறில் ஒரே நாளில் 3 அடி அதிகரிப்பு!

திருநெல்வேலி அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பாபநாசம், சேர்வலாறில் ஒரே நாளில் 3 அடி அதிகரிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், முக்கிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகள் ஒரே நாளில் தலா 3 அடி உயர்ந்துள்ளன.

இன்று காலை நிலவரப்படி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.99 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 85.90 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101.54 அடியாகவும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணைப் பகுதியில் 4.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதால், அணைக்கு வினாடிக்கு 2363 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக, சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியைக் கடந்து 101.54 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த திடீர் நீர்மட்ட உயர்வு, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS