திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பு செய்யது ராபியாத் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் வரவேற்புரையே முன்னாள் ரோட்டரி சங்க தலைவரும் பள்ளி மேலாண்மை குழு தலைவருமான திரு நைனா முகமது அவர்கள் ஆற்றினார் சிறப்பு விருந்தினராக வட்டார போக்குவரத்து அலுவலர் திரு சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட அறிவியல் மைய அலுவலர் திரு முத்துக்குமார் அவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை மாணவர்களுக்கு வழங்கினார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கக்கூடிய முதலுதவி குறித்து இளையோர் பயிற்சி மைய இயக்குனர் வைரவராஜ் அவர்கள் விளக்கினார் சாலை பாதுகாப்பு குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் திரு சக்தி மணி அவர்கள் பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொருளாதார ஆசிரியர் பொன்னு சாமி ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
