BREAKING NEWS

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்குடி,குறிச்சிகுளம் கிராமங்கள் தத்தெடுப்பு நிறுவன சமுதாய மேம்பாடு பொறுப்புணர்வு திட்டத்தில் தேர்வு.

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்குடி,குறிச்சிகுளம் கிராமங்கள் தத்தெடுப்பு நிறுவன சமுதாய மேம்பாடு பொறுப்புணர்வு திட்டத்தில் தேர்வு.

திருநெல்வேலி :  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் நிறுவனத்தின் சமுதாய மேம்பாடு திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காக
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் தாலூகாவில் குறிச்சி குளம்,களக்குடி ஆகிய இரண்டு கிராமங்கள் தத்தெடுக்கும் பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண் முன்னேற்றத்திற்காக இரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மும்விபையை சேர்ந்த விவிட் கார்பன்(கரியமில வாயு) உமிழ்வு குறைப்பு யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கார்பன் மேலாண்மையின் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக பணியாற்றி வருகிறது.இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக சூரிய சக்தி மின் உற்பத்தி
மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலூகாவில் குறிச்சி குளம்,களக்குடி கிராமங்களில் காற்றாலைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் உற்பத்தி நிலையங்களை விவிட் நிறுவனம் தொடங்க உள்ளது.இந்த உற்பத்தி நிலையங்கள் கார்பன் வாயுக்களை வெளியிடாது.இதனால் புவி வெப்பமடைதல் குறையும்.

நாட்டின் எரிசக்தி ஆற்றல் உற்பத்தி வளர்ச்சி அடையும் அதே நேரத்தில் அந்த வளர்ச்சியின் பயன்கள் அடித்தட்டு கிராம மக்களை சென்றடையும் வகையில் விவிட் நிறுவனம் விருதுநகரை சேர்ந்த பிளாசம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனத்தின் சமுதாய மேம்பாடு திட்டத்தின் கீழ் மானூர் தாலூகாவில் குறிச்சி குளம் களக்குடி ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள பெண்கள் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திட்டங்களான சுய உதவி குழுக்கள் சுய சார்பு வேலை பயிற்சி மற்றும் குழந்தைகளுக்கான கல்வி,மருத்து வமுகாம் போன்றவைகளை நடத்த உள்ளது.இதன் மூலம் நீடித்த சுற்று சூழல் வளர்ச்சியுடன் பெண்கள் குழந்தைகள் முன்னேற்றமும் நடை பெறும்.

விவிட் நிறுவனம் பிளாசம் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நெல்லை மாவட்டத்தில் மானுார் பஞ்.,யூனியன் களக்குடி, குறிச்சிகுளம் ஆகிய இரண்டு கிராமங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக ஐடியல் என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

நெல்லை எம்.பி ஞானதிரவியம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். விவிட் நிர்வாக இயக்குனர் புனித் கட்டியல், பிளாசம் இயக்குனர் மெர்சி அன்னபூரணி, மானுார் பஞ்.,யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், களக்குடி பஞ்., தலைவர் மாரிமுத்து, குறிச்சிகுளம் பஞ்., தலைவர் மகுதுணன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அருள்மணி, மாநில பேச்சாளர் நிஜாம், நிர்வாகிகள் அனிபா, தொப்பி மைதீன், விவிட் அதிகாரி ரோகித் சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )