திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.

செய்தியாளர் சங்கர நாராயணன்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 17 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 35. 88 இலட்சம் மதிப்பில் கடன் தொகைக்கான வங்கி பாஸ்புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இ.ஆ.ப வழங்கினார்கள்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் மேம்பாடு நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும்வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளை நோக்கமாக கொண்டது.
இத்திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் பாளையங்கோட்டை வட்டாரங்களில் 102 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
CATEGORIES திருநெல்வேலி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணுவாழ்ந்து காட்டுவோம் திட்டம்