திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்கோ சட்டம் குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி இன்று பணகுடியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களிடம் நட்புடன் பழக வேண்டாம் எனவும், காவல் உதவி செயலியின் பயன்கள் குறித்தும், பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக 181 இலவச எண்னை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும், போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழி எடுத்து போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
