திருப்பத்தூர் அருகே மழை நீரில் மூழ்கிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி. தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட வீட்டுவசதி வாரியம் பகுதி-1 மற்றும் பகுதி-2 பகுதிகளில் நேற்றிரவு பெய்த கன மழையால் மூழ்கி உள்ளது.
இது குறித்து மக்கள் கூறுகையில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இதனால் மழைநீர் வடிந்து செல்ல கூடிய நீர் வடிகால்கள் அடைபட்டு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வெளியேறாமல் இங்கேயே கடல் போல் தேங்கி நிற்கிறது. எங்களால் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம் என்று கூறினர்.
பின்பு தகவல் அறிந்து விரைந்து வந்த நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசனின் கணவர் தீயணைப்பு காவலர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் பொது மக்களை படகு மூலம் மீட்டனர்.