திருப்பத்தூர், ஆலங்காயம் கிரிசமுத்திரம் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணி.

திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
மேலும் அப்பள்ளி சத்துணவு கூடத்தையும், வகுப்பறை மற்றும் அங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் திடிர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்குப்பம் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.ஜி.அன்பு, ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.தாமோதிரன், ஆலங்காயம் மு.ஒன்றிய செயலாளர் மு.அசோகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.