திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான தேர்தல் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அஞ்சலக அலுவலகம் அருகில் அமைந்துள்ள திருப்பத்தூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான சங்கத் தேர்தல் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் தேர்தலில் 2023-2025ஆம் ஆண்டிற்கான தேர்தலில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பதவிகளுக்கு சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட்ட இந்த தேர்தலை வழிமுறைப்படுத்த சங்க மாநில தலைவர் பாக்கியராஜ் வருகை தந்து தேர்தலை மேற்பார்வையிட்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர் பாலன் செயலாளர் பெருமாள் பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.