திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது .

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கொள்ளிடம் ஆற்று கரையோரம் பிறந்து சுமார் 4 மாதங்களே ஆன பச்சிளங் ஆண் குழந்தை உடல் பிணமாக கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது .
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் . அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர் . ஆனால் அந்த குழந்தை யாருடையது ? என்று உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை .
இதையடுத்து குழந்தையின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் யார் ? குழந்தையை யாரேனும் ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்தனரா ? எப்படி குழந்தை இறந்தது ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்தால் முழு விவரம் தெரியும் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர் .
