BREAKING NEWS

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வார்டு இடைத் தேர்த்தலில் தி.மு.க.வெற்றி.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வார்டு இடைத் தேர்த்தலில் தி.மு.க.வெற்றி.

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவடைந்ததையொட்டி இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கும் கடந்த 9ந் தேதி தேர்தல் நடந்தது. திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகியில் 2-வது வார்டு, கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 9-வது வார்டு, உள்பட தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது.

இடைத்தேர்தல் முடிவடைந்ததையொட்டி வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கிராம ஊராட்சி வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகியில் 2-வது வார்டு தேர்தலில் 248 வாக்குகள் பதிவாகின.இதில் திறவுகோல் சின்னத்தில் 132 வாக்குகள் பெற்று தி.மு.க.வைச் சேர்ந்த கஸ்தூரிமுருகன் வெற்றிபெற்றுள்ளார்.இவருக்கு அடுத்ததாக போட்டியிட்ட சுகன்யா 114 வாக்குகளும், 2 செல்லாத வாக்குகளும் பதிவாகின.வெற்றி பெற்ற வார்டு உறுப்பினருக்கு தேர்தல் நடத்துனர்அலுவலர் சுதா சான்றிதழ் வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )