திருப்பூரில் கோவில் உண்டியல் திருட்டு. போலீசார் விசாரணை.

திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ கணபதி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் கோபிநாத் என்பவர் நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலை 6 மணிக்கு கோவிலில் சென்று பார்த்த போது கருவரை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமி புகாரின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார் உண்டியல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் எனவும், சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் மதில் சுவர் ஏறி குதித்து திருட்டு சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
CATEGORIES திருப்பூர்
