திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பு.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருப்பூர் பின்னலாடையில் மட்டும் ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது.இந்நிலையில் நூல் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் 230 ரூபாயில் இருந்த நூலின் விலை படிப்படியாக உயர்ந்து 460 ரூபாய்க்கு தற்பொழுது விற்பனை செய்யப்படுகிறது.
நூல் விலையேற்றத்தின் காரணமாக வெளிநாட்டு உற்பத்தி மட்டுமல்லாமல் உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்க படுவதாக கூறி திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஞ்சு ஏற்று மதியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் பஞ்சு பதுக்களை கட்டு படுத்தவேண்டும் என்றும் நூல் விலை ஏற்றதினால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு பின்னலாடை நிறுவங்கள் மூடும் நிலையில் உள்ளதாக கூறி மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், டீமா, சைமா, நிட்மா என அனைத்து பனியன் துறை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.