திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
மாதம் தோறும் அதிகரித்து வரும் நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் துறை அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டு உள்ளது மத்திய அரசு உடனடியாக நூல் விலையை குறைக்க வலியுறுத்தி பின்னலாடை துறை சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது இதனிடையே கடந்த வாரம் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டமும் பின்னலாடை துறை சார்பில் நடத்தப்பட்டது.
இதனிடையே நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் ரோபோ ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் நூல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.