திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது. தென்னையில், குருத்து பகுதியான மேல் பகுதியை கொண்டு வந்து, சீவி துண்டுகளாக, மதுரை பகுதியை சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இயற்கை உணவு, மருத்துவ குணம் நிரம்பியது என, ஒரு துண்டு, 20 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்.வியாபாரிகள் கூறுகையில் தென்னங்குருத்து, சர்க்கரை நோய், கல் அடைப்பு, பசியின்மை, அல்சர், வாய்ப்புண், உடல் உஷ்ணம் வெள்ளைபடுதல் வாய்ப்புண் கண்ணெரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாகும்.
இனிப்பு சுவையுடன் உள்ளதால், நேரடியாக உட்கொள்ளலாம்.பல்வேறு காரணங்களுக்கான வெட்டப்பட வேண்டிய தென்னை மரங்களை விலைக்கு வாங்கி, குருத்து பகுதியான மேற்பகுதியை மட்டும் கொண்டு வந்து, சீவி விற்பனை செய்து வருகிறோம். மக்களும் ஆர்வமாக வாங்கி உண்கின்றனர்,’ என்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.