திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவில் பொங்கல் திருநாள் விழா சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோமவாரப்பட்டி மலை கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவிலில் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பொள்ளாச்சி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அப்போது விவசாயிகள் தங்களது தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் நோயின்றி ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுதல் வைத்துகால் நடைகளின் மண் உருவபொம்மையை வைத்தும்.
பசுமாடுகளை கோவிலுக்கு காணிக்கையாகவும் வழங்கி சாமி வழிபாடு செய்துவருவார்கள் பின்பு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்களது நேர்த்திகடன் செலுத்துவார்கள்.
மேலும் அப்படி கோவிலுக்கு வழங்கப்படும் பசுகளை ஏழை எளிய மக்களுக்கு அறநிலையத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்படும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.