திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுமலை யு எஸ் எஸ் காலனியைச் சேர்ந்தவர் பழக்கடை சிவா என்ற சிவராஜ்,கோமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்,கவுண்டர் என்கிற பழனிச்சாமி,சேகர் என்கிற ஞானசேகர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இரிடியம் விற்பனை செய்வதாக கூறியுள்ளனர்.அதனை நம்பி கேரளா திருச்சூரை சேர்ந்த ரியாஸ்,மறையூரை சேர்ந்த இஸ்மாயில், தேனியைச் சேர்ந்த கதிரேசன்,வினித் ஆகிய 4 பேரும் இரிடியம் வாங்குவதற்காக அந்தியூர் பகுதியில் வைத்து ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.ஆனால் இரிடியம் கொடுக்காமல் ஏமாற்றிய பழக்கடை சிவா கும்பல் மீண்டும் அவர்களை உடுமலை பஸ் நிலையம் அருகே வரச் சொல்லியிருக்கிறார்கள்.


அதனை நம்பி ஷேக் இஸ்மாயில் மற்றும் கதிரேசன் உள்ளிட்டோர் அங்கே சென்றனர்.ஆனால் இரிடியம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடம் பணம் பிடுங்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது பொதுமக்கள் கூறியதால் இரிடியம் வாங்க வந்தவர்களின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட உடுமலை போலீசார் இஸ்மாயில்,கதிரேசன், பழக்கடை சிவா, ஞானசேகர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.தப்பியோடிய மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
