திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம்,
உடுமலைப்பேட்டை சிவசக்தி காலணி பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன் தலைமையில் உடுமலை நகர கழக செயலாளர் ஹக்கீம், அன்பர் ராஜன், பிரனேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் K.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார் 2011. முதல் 2016 வரை புரட்சி தலைவி அம்மா பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.
மேலும் அ.தி.மு.க ஆட்சியின்போது உடுமலைப்பேட்டை பேருந்து விரிவாக்கம், நகராட்சி புதிய கட்டிடம். கால்நடை மருத்துவ பயிற்சி மையம், சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். தற்போது நடைபெற்ற இடைதேர்தலில் பொய் வாக்குகள் பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க.ஆட்சியில் மகளிர்களுக்கு மானியத்தில் வழங்கிய இரு சக்கர வாகனங்களை நிறுத்தியது. தாலிக்கு தங்கத்தை தடுத்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்து நிறுத்தியதும் இந்த விடியா தி.மு.க. அரசுதான் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள். ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.