திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே ரேஷன் கடை ஊழியர் செய்த நூதன முயற்சி.

திருப்பூர் மாவட்டம்,
உடுமலைபேட்டை அடுத்த குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடை ஊழியர் மாற்று திறனாளியான சரவணன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வாட் ஆப் மூலம் பொருட்கள் வழங்கிவருகிறார்.
இவரது கடையில் அன்றாடம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பொருட்களை தனது செல்போனிலிருந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு வார்டு வாரியாக அன்றாடம் நமது ரேஷன் கடை வழங்கப்படும் பொருட்கள் எவை எவை என தெரிவித்து பயன்படும் வகையில் அன்றாடம் வழங்கிவருகிறார்.
மேலும் கடை விடுமுறை நாட்கள் குறித்தும் தகவல்களை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்து பொதுமக்கள் தங்களது தேவையற்ற அலைச்சல்களை குறித்தும் தகவல் தெரியும் வகையில் நடத்தி வருகின்றார் இதனால் குருவைப் நாயக்கனூர் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியில் அந்த ரேஷன் கடை ஊழியர் மாற்றுதிறனாளியான சரவணனை அனைவரும் பாராட்டி இவருக்கு வாழத்து தெரிவித்து வருகின்றனர்.