BREAKING NEWS

திருமங்கலத்தில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைப்மெற்றது.

திருமங்கலத்தில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைப்மெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு சிவபெருமானுக்கு ஹோமம் நடைப்பெற்றது.

 

 

திருமங்கலத்தில் உள்ள சாமவேதீஸ்வரர் கோயிலில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு்108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிவபெருமானுக்கு உரிய மூல மந்திர ஹோமம்,அஸ்திர மந்திர ஹோமம் யாகமானது ஷேவிக்கப்பட்டது.

 

 

அதனை தொடர்ந்து சிவபெருமானுக்கும் உலக நாயகி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் ஷேவிக்கப்பட்டு சங்காபிஷேகங்கள் ஷேவிக்கப்பட்டு மகா பிரதோஷ வழிபாடும் நட த்தப்பட்டது.பின்னர் உலக நன்மைக்காகவும்,பொதுமக்கள் அனைவரும்மன அமைதியுடன் எல்லா வளங்களையும் பெற்று வாழ வேண்டியும் சிவபெருமான் அருள் பெற வேண்டியும் சாமவேதீஸ்வரருக்கு ருத்ர திருசதி அர்ச்சனைகள் நடைப்பெற்றது.

 

 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி தலைமையில் ஹோம ஒருங்கிணைப்பாளர்கள் ஆலய அர்ச்சர்கள் பாலசுப்ரமணிய குருக்கள், செந்தில்நாத சிவம் மற்றும் ஆலய பணியாளர்கள் கிராமவாசிகள் அனைவரும் சேர்ந்து யாகத்தை சிறப்பாக நடத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )