BREAKING NEWS

திருமங்கலம் ஜவகர் நகர் பகுதியில் வட்டார இயக்க மேலாண்மை அலகு மைய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

திருமங்கலம்  ஜவகர் நகர் பகுதியில் வட்டார இயக்க மேலாண்மை அலகு மைய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதுரை முன்னோடி வங்கி மேலாளர் அனில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி திட்ட அலுவலர்கள் ஜே. மரியா ,ஏ. காளிதாஸ், சின்னத்துரை, ஆகியோர் கலந்து கொண்டனர் .

சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவினை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் மற்றும் வங்கி மேலாளர்கள் சுய உதவி குழு பெண்கள் குத்துவிளக்கேற்றி இவ்விழா துவங்கப்பட்டது.

கடன் வழங்கும் விழாவில் திருமங்கலம் அனைத்து வங்கி மேலாளர்கள், ,மற்றும் வட்டார இயக்க மேலாளர் , திரு. வி. பாக்கியம், கே. ரேணுகா, எஸ். சந்தியா, ஆர் .குமுதா . எஸ். பிரியா, எஸ். அம்பிகா, ஆர் .கே. சக்தி, மற்றும் சமுதாய பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் திருமங்கலம் ஊரக பகுதிகளில் உள்ள 94 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 5 கோடியே 54 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் கடன் அனுமதி காசோலை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )