BREAKING NEWS

திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

ஒவ்வொரு ஜோடிக்கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடை, முகூர்த்த மாலை, சீர்வரிசை வரிசை கொடுத்து மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் திருமணம் வரம் தரும் உத்வாகநாதர் சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

 

ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலாடுதுறை ராஜகுமார், சீர்காழி பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS