BREAKING NEWS

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய வாலிபர் கைது

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய வாலிபர் கைது.

‘என்னை திருமணம் செய்து கொள்’: மறுத்த பெண்ணின் ஆபாச படத்தை வெளியிட்ட வாலிபர்!

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அருகே பூஞ்சோலைக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (24). வில்லியனூரில் காய்கறிகடை நடத்தி வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார்.

இந்த நிலையில் ஜெயக்குமாரும், அந்த இளம்பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சூழலில் ஜெயக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதைத் தவிர்த்தார். அத்துடன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார்.

ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் ஜெயக்குமார் பேசியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த ஆபாச படத்தை பெண்ணின் உறவினர்களுக்கும், சமூக வலைதளத்திலும் ஜெயக்குமார் வெளியிட்டார். இதைப்பார்த்த அந்த இளம்பெண் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )