BREAKING NEWS

திருமூர்த்தி மலையில் கனமழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை.

திருமூர்த்தி மலையில் கனமழை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை.

திருமூர்த்திமலையில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் திருமூர்த்தி அணை பஞ்சலிங்க அருவி அமணலிங்கேஸ்வரர் கோவில் வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டு செல்கின்றனர் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்கச் செல்வது வழக்கம்.

நேற்று திடீரென திருமூர்த்திமலையில் பகுதியில் கனமழை கொட்டியதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் இதனால் நேற்று அருவியில் குளிக்க நினைத்து வந்த வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர் நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )