BREAKING NEWS

திருவண்ணாமலையில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.

திருவண்ணாமலையில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.

 திருவண்ணாமலை பகுதிகளில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

 

திருவண்ணாமலை பிடிஓ அலுவலக கூட்ட அரங்கத்தில், தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. ஆர்டிஓ வெற்றிவேல் தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தேன்மொழி, பிடிஓ பரமேஸ்வரன், வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

திருவண்ணாமலை பகுதியில், தற்போது மழை பரவலான பெய்கிறது. அதனால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிப்பு கண்டறியப்படும் கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அளவில் யூரியா மற்றும் உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை தீவிரம் அடையும் முன்பு, நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

 

நீர்வரத்து மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால்தான், மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும்.

 

பருவமழையால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருக்கிறது. எனவே, நெல் விளைச்சல் வழக்கத்தைவிட 2 மடங்காக உயர்ந்துவிட்டது. அதனால், விலை குறையும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

 

எனவே, தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, அரசு நிர்ணய விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். நாயுடுமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடத்தில், உழவர் சந்தை அமைக்க வேண்டும். அதனால், அங்குள்ள விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெறுவார்கள்.

 

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.அதைத்தொடர்ந்து, ஆர்டிஓ வெற்றிவேல் பேசுகையில், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் உத்தரவின்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

அதற்காக, குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் குறிப்பிட்டு சொன்னால், அந்த இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )