BREAKING NEWS

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.

வேலூர்: திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். முதல் முறையாக நீட் தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

 

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., என இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்ட ாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.

 

 

வேலூர் மாவட்டத்தில் விஐடி பல்கலைக்கழகம், சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, காட்பாடி சன்பீம் பள்ளி, வேலூர் வி.வி.என். கே.எம் சீனியர் செகண்டரி பள்ளி, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம், காட்பாடி கிங்ஸ்டன் சர்வதேச பள்ளி, ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, டி.கே.எம் மகளிர் கல்லூரி, காட்பாடி பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி என 10 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை டிஏவி பள்ளியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் 12 மையங்களில் மொத்தம் 7,009 மாணவ, மாணவிகள் இன்று தேர்வில் பங்கேற்கவுள்ளனர். தேர்வுக் காக, சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 மையங்களில் 3,689 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். புதிய கட்டுப்பாடுகள் இந்தாண்டு நீட் தேர்வில் ஒவ்வொரு அறையிலும் 24 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளனர். வழக்கம்போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் ஜாமர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் இருந்தபடி அனைத்து தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வுகளை கண்காணிக்கும் வகை யில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.தேர்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுடன் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் முதல் முறையாக பறக்கும் படை அமைத்துள்ளனர். நடப்பு கல்வியாண்டு நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 8 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )