BREAKING NEWS

திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்.

திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்.

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் நிகழ்ச்சி நடந்தது.

 

இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கி செய்யாறு பேருந்து நிலையம் மற்றும் அம்மா உணவகம் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

 

தற்போது மர்ம காய்ச்சல் பொதுமக்களிடையே பரவி வரும் நிலையில் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் நகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடத்தி வழங்கப்படுகிறது.

 

இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மதனராசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )