திருவள்ளுரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில் 12 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டது.

வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியானது திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிருந்து வந்திருந்த 150 மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் 60 மாற்றுத் திறனாளிகள் என 210 மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தங்களுக்கு விருப்பமான மாப்பிள்ளை பெண்களை மாற்றுத்திறனாளிகள் மேடையிலே தேர்வு செய்து கொண்டனர்.
மேலும் மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டுப்பிரசுர பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் இறுதி செய்யப்பட்ட 12 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கீதாபவன் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 1.50லட்சம் சீர் வரிசையுடன் கோலாகலமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சி மூலம் தங்களுக்கு வாழ்வில் வெளிச்சத்தை தந்திருப்பதாகவும் மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் சிம்மசந்திரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, ஜினேந்திரஜோதி லலிதா, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ ஜி.சுரேஷ், பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டனர்.