திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலய மகா கும்பாபிஷேக விழா.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலய மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கடந்த புதன் அன்று காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டது வியாழன் அன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் அன்று மாலை 5:00 மணிக்கு மூன்றாம் யாக கால பூஜையும் நடைபெற்றது. இன்று காலை 7.30 மணிக்கு நான்காம் யாக கால பூஜை செய்யப்பட்டு காலை 9:30மணிக்கு மஹாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்காம் கால பூஜையுடன் கோவில் ராஜகோபுரத்தில் அமைந்துள்ள கலசங்கள் மீது புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் மீது ஊற்றப்பட்டது பின்னர் நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது .இதில் கடம்பத்தூர் பேரம்பாக்கம் செஞ்சி பணம் பாக்கம் பெரியங்குப்பம் அகரம் புதுமவிலங்கை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலயோகி மாவட்ட செயலாளர் தினேஷ் மாவட்ட துணை செயலாளர் குமார் ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
