திருவள்ளூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே மோவூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை நடைபெற்றது.
இம்முகாமினை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல்,
செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீங்க சிகிச்சை உள்ளிட்டவை சிறப்பு கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதனை பார்வையிட்டு அங்கு மாடுகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் இடையே அமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தமிழக முதல்வர் கால்நடைகளை வளர்பவர்களுக்கு கால்நடைகளின் நலன் கருதியும் இது போன்ற சிறப்பு முகாமை அறிவித்து அந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும்,..
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ, 28,லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் 200க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் இதனால் கால்நடை விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
மேலும் இந்த முகாமில் கிடாரி கன்றுகளை பராமரிப்பில் சிறந்த விளங்கிய கால்நடை பராமரிப்பாளர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள், கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர், கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.