BREAKING NEWS

திருவள்ளூர் மவட்டம் பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மவட்டம் பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மவட்டம் பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளது என்ற இரகசிய தகவலை அடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் Dr.ஜெயந்த் முரளி, இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் திரு.தினகரன், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கதிரவன் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் திரு.பிரபாகரன், திரு.பாண்டிய ராஜ், திரு.சுந்தர் ஆகியோர்கள் அடங்கிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலிசார் சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இச்சிலைக்கு விலை ருபாய் 25 கோடி சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலை கடத்தல் காரர்களை நம்பவைத்து அவர்கள் சிலையை காண்பித்தவுடன் 1.சென்னை வெள்ளவேடு, புதுகாலணியை சேர்ந்த எத்திராஜ் மகன் பக்தவச்சலம் (எ) பாலா, வயது 46, 2. சென்னை, புதுசத்திரம், கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாக்கியராஜ் வயது 42 இவர்களிடமிருந்து சிலையை கைப்பற்றி காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவளகத்தில் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு குற்ற எண்.13/2022 என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின்
புலண்விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் மேற்கண்ட நபர்களை விசாரணையின் தொடர்ச்சியாக கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்த உள்ளார் மேற்படி சிைையானது பச்சைகல்லிங்கத்தினை உலோகத்தால் ஆகிய நாகாபரணம் தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வருடன் சுமார் 29 செ.மீ உயரம் 18 செ.மீ அகலம் பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் பச்சைகலர்லிங்கம் உயரம் சுமார் 7 செ.மீ அதன் சுற்றளவு 18 செ.மீ ஆக உள்ளது. மேற்படி மேல்நடவடிக்கைகாக சிலையை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளார். மேற்படி சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லபடுகிறது. மேலும் படம் எடுத்த நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சங்கள் யாவும் நேபாள பாணியில் ஆனது என்று சொல்லப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )