BREAKING NEWS

திருவாலங்காடு ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார வாகனத்தை பூம்புகார் எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார்

திருவாலங்காடு ஊராட்சியில்  நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார வாகனத்தை பூம்புகார் எம்எல்ஏ கொடி அசைத்து  துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவலங்காடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுகாதார மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் குத்தாலம் ஒன்றியக் குழுத்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த பேரணியின் போது சாலை ஓரத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தானே துடைப்பம் கொண்டு அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகப்பா,ஒன்றியக் குழு உறுப்பினர் இராஜவள்ளி பாலமுருகன்.நகர மன்ற தலைவர் செல்வராஜ்,தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் திரளான பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )