திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் மின்சாரம், பால் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து காட்டூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி,
தமிழக அரசு மின் கட்டணம், சொத்து வரி, மற்றும்பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் காட்டூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோபால்ராஜ் தலைமை வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம், சொத்துவரி, பால் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் முருகானந்தம், ரோஷன், குழந்தைவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்