BREAKING NEWS

திருவேங்கடத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

திருவேங்கடத்தில்  அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியம் திருவேங்கடம் பேரூர் கழகத்தில் அதிமுக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமையில் மாவட்ட கழக அவைத்தலைவர் வி பி மூர்த்தி, இணை செயலாளர் சண்முகப்ரியா, துணை செயலாளர்கள் பொய்கை சோ. மாரியப்பன், பொருளாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

குருவிகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார், திருவேங்கடம் பேரூர் கழக செயலாளர் சுதாகர் தொகுத்து வழங்கினார், மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி எம் ராஜலெட்சுமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் டாக்டர் முத்தையா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்பையா பாண்டியன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் கந்தசாமி பாண்டியன், தலைமை கழக பேச்சாளர்கள் பன்னீர்செல்வம், பாரதியன் சிறப்புரையாற்றினர்

கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கு செய்த நல்ல பல திட்டங்களையும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கூட்டம் நடத்த தகுதியான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே என்றும்

பேரறிஞர் அண்ணா பெயரை வைத்து திமுக செய்த திருட்டுத்தனங்களை எடுத்து கூறியும் இந்த விடியா திமுக ஆட்சியில் பொதுமக்கள் படும் இன்னல்களை எடுத்துரைத்து இந்த இன்னல்கள் மீண்டும் தமிழக மக்களுக்கு வரக்கூடாது என்றால் தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி அமைய வேண்டும் பொதுச் செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் வருகிற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் பெருவாரியான ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினர்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ராமசாமி என்ற ரவி, சந்திரன், சத்யா, பாலசுப்பிரமணியன், பரமகுருநாதன், மகாதேவன், டாக்டர் திலீபன், குட்டி மாரியப்பன், குருசேவ், சங்கரசுப்பிரமணியன், செந்தில்குமார், தீக்கனல் லெட்சுமணன், ஒன்றிய கழக செயலாளர்கள் தேவராஜ், முத்துப்பாண்டியன், ராமதுரை,

குருக்கள்பட்டி செல்வராஜ், வேல்முருகன், அடைக்கலாபுரம் செல்வராஜ், மகாராஜன், ரமேஷ், துரை பாண்டியன், பொன்முத்துவேல் சாமி, ராஜாராம் பாண்டியன், டாக்டர் சுசீகரன், பெரியதுரை, ஜெயகுமார், ராமச்சந்திரன், நகர கழக செயலாளர்கள் ஆறுமுகம், எம் கே முருகன்,

பேரூர் கழக செயலாளர்கள் முத்துகுட்டி, நல்லமுத்து, சேவகபாண்டியன், மாடசாமி, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் இடைகால் ராமையா பொருளாளர் ஆத்மநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்,

 

இறுதியாக மாவட்ட மகளிரணி பொருளாளர் நிர்மலாதேவி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், குருவிகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சம்சிகாபுரம் இரவிச்சந்திரன் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

CATEGORIES
TAGS