BREAKING NEWS

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.

திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 102-வது நாளாக யாகசாலை அமைத்து தொடர் உண்ணாவிரதம்.

தஞ்சை மாவட்டம்: திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி தொடர் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது டிசம்பர் மாதம் வயல்களில் நெற்பயிர்களின் மீது மண்ணை கொட்டுவதை கண்டித்து பொக்களின் இயந்திரத்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் மறியல் செய்து போராட்டம் செய்தனர்.

 

இதனால் மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் அதன் பிறகு விவசாயிகள் உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.

 

தஞ்சை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் தோல்வியில் முடிவுற்றது. விவசாயிகள் மீண்டும் புறவழிச்சாலியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டியூரில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்றனர்.

 

புறவழிச்சாலை பணியானது நிறுத்தப்பட்டு இருக்கின்றது. மாற்று வலியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும் இத்திட்டத்தினை மத்திய மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். விவசாயிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நூதன போராட்டத்தை செய்து வருகின்றனர் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம் செய்தனர்.

 

 

அடுத்து கருப்புக்கொடி ஏந்தி தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். தற்போது நூத்தி ரெண்டாவது நாள் போராட்டத்தில் அரசுக்கு எதிராக யாகம் வளர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

CATEGORIES
TAGS