BREAKING NEWS

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் மூக்காயி என்பவருது கூரை வீடு எரிந்து சேதமானது இதில் அவரது உடமைகள், ஒன்றரை பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எறிந்து நாசமானது .

 

 

இந்நிலையில் தீக்கிரையான மூக்காயி என்பவர் கூரை வீட்டை திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு 25 ஒரு கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், போர்வை, புடவை தண்ணீர் குடம் போன்றவைகள் வழங்கி ஆறுதல் கூறினார்.

 

 

அப்போது மாவட்ட கவுன்சிலர் நகர் சி. சக்தி விநாயகம், வேப்பூர் வட்டாட்சியர் மோகன், கிளை செயலாளர் மணிவேல், கீழக்குறிச்சி சிலம்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS