துப்பாக்கி குண்டுகளை திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

திருச்சி தென்னூர் ஹய் ரோட்டில் கடந்த 25.10.2022 ஆம் தேதி நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரவிந்த் (28) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் அரவிந்த் என்பவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வீட்டில் துப்பாக்கி குண்டுகளை திருடியது சம்பந்தமாக ஒரு வழக்கும், தள்ளுவண்டி கடைக்காரர், பனியன் கடைக்காரர், இருசக்கர வாகன மெக்கானிக் ஆகியோரிடம் கத்தியை காண்பித்து படத்தை பறித்து சென்றதாக மூன்று வழக்குகளும் முன்விரோதம் காரணமாக இரு சக்கர வாகனத்தை எரித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கு உட்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
எனவே அரவிந்த் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதும் கத்தியை காட்டி பணம் பறிப்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரிய வருவதால் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக.
