துப்புரவு தொழிலாளர்களை ஜாதி ரீதியாக பேசி துன்புறுத்துவதாக கூறி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், வாட்டர் மேன் நாகராஜ் ஆகிய பணியாளர்கள் துப்புரவு தொழிலாளர்களை ஏளனமாக ஜாதிய ரீதியாக பேசி துன்புறுத்தல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமிழ் புலிகள் கட்சியினர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின் போது டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ,செயலாளர், வாட்டர் மேன் ஆகியோரை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்ட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரியவலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்து சென்றனர்.