BREAKING NEWS

துளசிச்செடி மூலம் புற்று நோய்க்கு மருந்து – ஜெர்மன் நாட்டின் காப்புரிமை பெற்ற திருச்சி கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார்.

துளசிச்செடி மூலம் புற்று நோய்க்கு மருந்து – ஜெர்மன் நாட்டின் காப்புரிமை பெற்ற திருச்சி கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார்.

திருச்சி புனித வளனார் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார். இவர் தாவரவியல் துறை பேராசிரியர் ஆவார். இவர் தனது ஆராய்ச்சி மாணவருடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அதற்கான காப்புரிமை பெற்றுள்ளார். தற்போது துளசிச்செடி மூலமாக பிரித்தெடுத்த மூலக்கூறுகளால் பெண்களின் மார்பகப் புற்று நோய்க்கு மருந்தை கண்டுபிடித்து அதன் ஆராய்ச்சியின் முடிவில் ஜெர்மன் நாட்டின் காப்புரிமை பெற்று உள்ளார்.
அதில் மார்பக புற்றுநோயை வளர்ச்சியை தடுக்க முடியும் என தெரிவித்து அதனை நிரூபித்துள்ளனர். சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு இதனை கண்டறிந்துள்ளனர். மேலும் தொடர்ந்து இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேராசிரியர் செந்தில்குமார் ஏற்கனவே கொரோனோ காலகட்டத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருந்த வேளையில் பலவிதமான வகையில் மாஸ்க் வடிவமைத்து அதற்கான காப்புரிமையைப் இந்திய அரசிடம் பெற்று உள்ளோம். அது வைரஸை கட்டுப்படுத்தக்கூடியதாக அதற்குரிய காப்புரிமை இந்திய அரசிடம் பெற்றுள்ளோம். இதற்கு முன்பாக
பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுமே கெமிக்கல் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக தாவர பூக்களைக் கொண்டு பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யும் போது அது தீங்கு விளைவிக்காமல் இருக்கும் இதற்கான ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து காப்புரிமை பெற்றுள்ளோம்.
எங்கள் ஆராய்ச்சி அனைத்தும் மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
தற்பொழுது பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்கி வருகிறது. இதற்கு தீர்வாக ரேடியேஷன்தெரபி, கீமோதெரபி பயன்படுத்தி வருகிறது. ஹெர்பல் பேஸ்ட்டில் சரியாக வரவில்லை.
துளசியோடு குணாதிசயம் நிறைய உள்ளது. துளசிச் செடிகளை ஆராய்ந்து அதில் செயல்களைக் கண்டு ஆராய்ந்து நோய்த்தொற்று எந்த அளவு அது கட்டுப்படுத்திய என்பதைக் பெங்களூரில் ஆராய்ச்சி மூலம் கண்டோம். அதனை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு ஜெர்மன் நாட்டில் காப்புரிமைக்கு அதனை கொண்டு சென்றோம்.
ஜெர்மனியில் ஆறு மாதம் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அரசின் காப்புரிமை வாங்கி, இந்தியாவின் அனுமதி கிடைத்தவுடன் ஜெர்மனியின் காப்புரிமை பெற்றோம்.
அடுத்த கட்டத்திற்கு இந்த ஆராய்ச்சிகளை கொண்டு செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )