தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் உயர் மட்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் ஆய்வு.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி சீல் வைத்தனர். இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு மூடி கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடந்து விட கூடாது என்பதற்காக சென்னையில் இருந்து வந்துள்ள தமிழக மாசுகட்டுபாட்டு வாரிய செயலர் விஜயபாஸ்கர் தலைமையில்,

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் விஜயகுமார், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில், உலோகவியல் துறை பேராசிரியர் சம்பத் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் மற்றும் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் 20 பேர் இன்று காலை ஒன்பது மணிக்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் வைக்கப்பட்டுள்ள சிப்சம் வெளியேற்றுவதற்காகவும் மேலும் இயந்திரங்கள் செயல்பாடு குறித்தும் ஆய்வு மேற்கண்டதாக கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வை முடித்துக்கொண்டு அதிகாரிகள் வெளியேறினர் இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
