தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே டிஜிட்டல் போர்டு ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு விசிக பிரமுகர் வெட்டி படுகொலை அவரது மகன் படுகாயம் பரபரப்பு.

தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மாரிமுத்து கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் கரன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் 3 சென்ட் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு தலைவரின் டிஜிட்டல் போர்டு படத்தை ஒட்டியுள்ளனர்.
இந்த டிஜிட்டல் போர்டை மாரிமுத்துவின் மகன் கரன் கிழித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மாரிமுத்து மற்றும் முகேஷின் ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் முகேஷ் தலைமையிலான ஒரு கும்பல் மாரிமுத்துவின் வீட்டிற்கு சென்று பயங்கர ஆயுதங்களால் மாரிமுத்துவை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் தடுக்க வந்த மாரிமுத்துவின் மகன் கரணையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியகொலை கும்பலை தேடி வருகின்றனர்.
டிஜிட்டல் போர்டு வைத்ததில் ஏற்பட்டதகராறு காரணமாக படுகொலை நடந்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.