தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 39வது வார்டு சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
திமுக முன்னால் மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமி நினைவு தினத்தையொட்டி போல்பேட்டையில் அமைந்துள்ள நினைவிடத்தில் சண்முகபுரம் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமி நினைவு தினம் இன்று தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அனுசரிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து போல் பேட்டையில் அமைந்துள்ள என். பெரியசாமியின் நினைவிடத்தில் சண்முக புரம் பகுதி திமுக செயலாளரும், 39 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் நினைவிடத்தில் அமைந்துள்ள பெரியசாமியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
20 வது வார்டு வட்ட கழக செயலாளர் ரவீந்திரன், மேயரின் உதவியாளர் பிரபாகரன், உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.