தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வரும் தொழிலாளி கொலை.

தூத்துக்குடி சாத்தான் குளம் புது குளம் பகுதியை சேர்ந்தவர் ராம் மகன் கருப்பசாமி (47), மனைவி சங்கரி 2 பெண் குழந்தைகள், இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சிறியதாக குடிசை கட்டி நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். தூத்துக்குடி 3ம் மைல் அருகில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் இவர், இன்று அதிகாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள அவரது கடையில் மர்மமாக இறந்து கிடந்தார். இதை அருகில் உள்ளவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி டவுன் பொறுப்பு உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
