BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது – ரூபாய் 84,960/- மதிப்புள்ள 627 பண்டல் புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது – ரூபாய் 84,960/- மதிப்புள்ள 627 பண்டல் புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்,

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் விளாத்திகுளம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது,

 

 

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்தூர் to வேம்பார் கிழக்குக் கடற்கரை சாலை ஜங்ஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில்,

 

அதில் வந்த குளத்தூர் மேட்டு பனையூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரமேஷ் (43) என்பவர் சட்ட விரோதமாக விற்பனைக்காக காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

 

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் எதிரி ரமேஷை கைது செய்து அவரிடமிருந்து 84,960/- மதிப்புள்ள 627 பண்டல் புகையிலை பொருட்களையும்,

 

கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் (TN 69 BM 7606 HYUNDAI VENUE) பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )