தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் முதன் முறையாக கேப் வகை கப்பல் கையாளப்பட்டது.
![தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் முதன் முறையாக கேப் வகை கப்பல் கையாளப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் முதன் முறையாக கேப் வகை கப்பல் கையாளப்பட்டது.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-27-at-12.02.46-PM.jpeg)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டார் நீளமும் 45.05 மீட்டர் அகலமும் கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 292 மீட்டார் நீளமும் 45.05 மீட்டர் அகலமும் உடைய 1,80,000 டன் கொள்ளவு கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை கப்பல் இன்று கையாளப்பட்டது. 11.4 மீட்டர் மிதவை அழமுடன் வந்த இந்த கேப் சைஸ் கப்பல் ஓமான் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்திலிருந்து 92,300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சமுடன், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல்தளம் 9-ல் கையாளப்பட்டது. இக்கப்பலிருந்து, Eastern Bulk Trading & Shipping Pvt Ltd., நிறுவனத்திற்க்காக சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இக்கப்பலின் சரக்கு கையாளும் முகவர்கள் சீ போர்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கப்பல் முகவர்கள் சீபோர்ட் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் ஆவர்கள். முன்னதாக 22.01.2015 அன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், MV Lake D என்ற கேப் வகை 18.34 மிதவை ஆழம் கொண்ட கப்பலினை துறைமுகத்தின் கப்பல் காத்திருக்கும் பகுதியில் (Anchorage Area) 6,000 டன் இரும்பு தாதினை மிதக்கும் பழுதுக்கிகள் மூலம் கையாண்டது.
இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் தா.கீ. ராமசந்திரன் கூறுகையில் இது போன்ற பெரிய வகை கப்பல்களை கையாளுவதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவுகளை குறைப்பதுடன் உலகளவில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக்கத்தை மிக குறைந்து கட்டணத்தில் கையாள முடியும் என்று கூறினார். மேலும் இக்குறிப்பிடத்தக்க சாதனையை புரிவதற்கு உறுதுணையாக இருந்த, கப்பல் முகவர்கள், சரக்கு கையாளும் முகவர்கள், நகரும் பழுதுக்கி மற்றும் கன்வேயர் இயக்குபவர்கள், துறைமுகத்தின் கடல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தற்போது பல்வேறு வகை சரக்குகளான, நிலக்கரி, சரக்குபெட்டங்கள், சுண்ணாம்புகல், ஜிப்சம், காற்றாலை இறகுகள், இயந்திர உதிரி பாகங்கள், உரங்கள், மற்றும் உணவு தானியங்களையும் கையாண்டு வருகிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை, மிகச்சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகமானது தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் துறைமுகாக திகழ்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.