தென்காசி அருகே கடையநல்லூரில் உலக நன்மை வேண்டியும், நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் சிறப்பு ஆரத்தி பூஜை.

தென்காசி அருகே கடையநல்லூரில் உலக நன்மை வேண்டியும், நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் நோய் தொற்றுகள் மக்களை அச்சுறுத்த கூடாது என்ற அடிப்படையில் பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தனியார் மண்டபத்தில் ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதுகுறித்து பரத்வாஜ் சுவாமிகள் கூறுகையில், உலக நன்மை வேண்டியும், நீர் வளம் பெருக வேண்டும் என்பதற்காக நதி பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜை நீர் பெருகி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது. மேலும் உலக நாடுகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட கூடாது, தொற்று நோய்கள் மூலம் மக்கள் பாதிக்கப்பட கூடாது என தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற சுவாசினி பூஜையில் மலர் தூவி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தென்காசி
