தென்காசி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தென்காசி மாவட்டக் கிளை செயலாளர் இரவிச்சந்திரன் வரவேற்றார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான முனைவர் இனநலப் பெரியார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும் நிகழ்வில் மனோகரன், இலஞ்சி குமரன், ஆசிரியர் சுரேஷ், ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன், வழக்கறிஞர் தமிழ்மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சிவ செல்வ கணேஷ் நன்றி கூறினார்