BREAKING NEWS

தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.

தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.

 

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன், காவலர்கள் அருள்ராஜ், அலெக்சாண்டர், கார்த்திக், முத்துக்குமார், சதாம் உசேன் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் தனிப்படை உதவியுடன் கஞ்சா சம்மந்தமாக சோதனையில் ஈடுபட்டனர்.

 

 

அப்போது தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் மணிச்செல்வன் வயது 28 மற்றும் செங்கோட்டை பெரிய பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனஞ்ச கும்பு மகன் மணிகண்டன் வயது 24 என்பவர் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

 

அப்போது அவர்களிடமிருந்து சுமார் ரூ.1,20,000 மதிப்பிலான சுமார் 4 கிலோ கஞ்சாவும், ரூ.2,00,000 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு பிடிபட்டனர். மேலும் தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

இதே போன்று செங்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் தெற்குமேடு ஆர்.சி.தெருவைச் சேர்ந்த சேது என்ற வடிவேல் மகன் பிரகலாதன் என்பவரும் விஸ்வநாதபுரம் புதுமனை தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மாரிமுத்து ஆகிய இரண்டு நபர்களும் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பீட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

 

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டு ரூ.4.25 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் 4 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )