தென்காசி மாவட்டம் இலஞ்சியில் தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (02.07.2022) தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு மணக்காவு அய்யனார் திருக்கோவில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
பொதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட 40 ஆண்டுகால பாரம்பரியமிக்கதும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் முதன்மை சங்கமாக விளங்கும் தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்க 2022 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பொறியாளர் எஸ்.விஜய முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை பொது செயலாளர் பொறியாளர் குமார் வரவேற்புரை வழங்கினார், பொறியாளர்கள் மாநில பொதுச் செயலாளர் அழகப்பன், மாநில துணைத்தலைவர் லோகநாதன், தலைமை நிலை செயலாளர் மோகனசுந்தரம், மாநில அமைப்பு செயலாளர் சுந்தரலிங்கம், தேர்தல் ஆணையாளர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் மாநில தலைவர் சௌந்தரராஜன் விழா பேரூரை வழங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் மாநில துணை அமைப்பாளர் சக்திவேல், மாநில பொது செயலாளர் துரைராஜ், மாநில பொருளாளர் செந்தில், மாநில துணை தலைவர், மாவட்ட செயலாளர் அரசின் ஜான் ஆகியோர் விழா சிறப்புரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் மாநில தலைவர் சௌந்தரராஜன், சங்கத்தின் மாநிலத் தலைவர் விஜய முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் அதிகரிக்கும் பொருட்டு சட்டமன்ற மானிய கோரிக்கையில் புதிதாக 11 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அறிவிப்பு வெளியிட்டது. 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 எனும் தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் நவீன திறன் பயிற்சி இளைஞர்களுக்கு வழங்க அரசாணை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள் மேற்படிப்பு தொடரும் பொருட்டு 10 வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் கல்வி துறை மூலமாக வழங்க அரசானை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கும் தமிழக முதல்வருக்கும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.
பட்டயத்துறை பிரிவில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய முதல்வர் பதவி உயர்வு உட்பட அனைத்து நிலைகளிலும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தகுதி மற்றும் சரியான பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க தக்க நடவடிக்கை எடுக்க இப்பொது குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
பதவி உயர்வு, மாறுதல் மற்றும் காலமுறை மாறுதலை மற்ற துறைகளில் செயல்படுத்துவது போல நமது துறைகளிலும் கலந்தாய்வு முறையில் யாரும் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும், 6வது ஊதியக் குழுவிலுள்ள முரண்பாடுகளை களையாள நிலையில் 7வது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தியதால் அலுவலர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவில் முறையீடு செய்தும், சரி செய்யாத நிலையில் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து விரைவில் அமுல்படுத்திட நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினர்.
முன்னதாக தமிழ்நாடு அரசு தொழிற்பெயர்ச்சி அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் பிரபு மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு தொழில் பயிற்சி நிலைய நெல்லை மண்டல செயலாளர் சாந்தி நன்றியுரை வழங்கினார்.
