BREAKING NEWS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட்டனர் அப்போது காரின் உள்ளே இருந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. 2 காரில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரனாகப் பதில் அளித்தனர். 

 

 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ரூபாய் நோட்டுகளை பரிசோதித்தபோது, அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் ஈரோட்டில் இருந்து 2 கார்களில் கோவில்பட்டி வழியாக சங்கரன் நோக்கி வந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

 

 

இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் மற்றும் தனிப்படை போலீசார்.

 

 

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (49) சந்தோஷ்,(32),சிராஜ்கரிம் (44) வீரபத்ரன் ((34), ஜெகதீஸ் (38) ஈரோட்டைச் சேர்ந்த வளர்மதி(42), கிருஷ்ணவேணி (23) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

 

அவர்களிடமிருந்து 38 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளையும், ரொக்கம் ரூ 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சங்கரன்கோவில் வழியாக வந்த காரில் கள்ளநோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS