BREAKING NEWS

தென்காசி மாவட்டம் சிவகிரியில் அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.

தென்காசி மாவட்டம் சிவகிரியில்  அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சிவகுமார் பொறியியல் பட்டதாரியான சிவக்குமார் சென்னையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சிவகுமார் நேற்று இரவு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

 

அப்போது அவ்வழியே சென்ற செல்வகுமார் என்பவரின் உறவினர் பெண்ணை கேலி செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் மது போதையில் சிவக்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார் இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார்.

 

 

இச்சம்பவம் குறித்து அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்ட சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

மேலும் சிவகுமாரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் தேவிபட்டினம் காமராஜர் காலனி கருப்பையா மகன் செல்வகுமார் என்பவரை சிவகிரி போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )